EBOOK

தமிழ்
About
தற்கால தமிழ் இலக்கியத் துறையில் சிறுகதை, கவிதை ஆகிய இரு பிரிவுகளும் வளம் பெருக கணிசமாக பங்கு செலுத்தி இருப்பவர் ந.பிச்சமூர்த்தி.
அவரது நாலைந்து சிறுகதை தொகுப்புகளும் இரண்டு கவிதை தொகுப்புகளும் ஒரு நாடகமும் வெளி வந்திருக்கின்றன. அவர் இவை தவிர பல எழுதி இருக்கிறார். ஓரங்க நாடகங்கள், 'மனநிழல்' என்ற கட்டுரைகள், இலக்கிய கட்டுரைகளும் எழுதி இருக்கிறார்.
இவற்றோடு பிச்சமூர்த்தி சிறுவர்களுக்கான கதைகள் எழுதி இருக்கிறார். அவற்றை தொகுத்து 'காக்கைகளும் கிளிகளும்' என்ற இந்த கதை தொகுப்பு வெளிவருகிறது. இவை 1994 முதல் 1968 வரையில் ஹனுமான், சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளில் வெளியானவை ஆகும்.
கழுதை ஒன்று குருட்டுத்தனமாக ஒரு பூந்தோட்டத்துக்குள் புகுந்துவிட்டது. தோட்டக்காரன் பாதைகளை யெல்லாம் சுத்தம் செய்து காகிதங்களையும் குப்பைகளையும் குவித்து வைத்திருந்தான்.
'ஆஹாஹா' என்று மகிழ்ச்சியுடன் காகிதங்களைக் கழுதை தின்ன ஆரம்பித்தது. தின்பதை ரசித்துக்கொண்டே கழுதை ஒரு நிமிஷம் கண்ணை மூடிற்று. மறுபடியும் கண்ணைத் திறந்த பொழுது அழகிய வண்ணாத்திப் பூச்சி ஒன்று அருகிலிருந்த மலரின்மீது உட்கார்ந்திருந்ததைக் கண்டது.
'அங்கே என்ன செய்கிறாய்?'
"மலரின் தேன் துளியைக் குடிக்கப் போகிறேன்.''
''முட்டாளே! காகிதம் கடல்போல இங்கே கிடக்கிறது. அதை விட்டுவிட்டுத் துளியைத் தேடிக் கொண்டு தடுமாறுகிறாயே" என்று கூறிவிட்டுக் காகிதத்தை மறுபடியும் தின்ன ஆரம்பித்தது கழுதை.
அந்தச் சமயம் வெளியே சென்றிருந்த தோட்டக்காரன் திரும்பி வந்தான். தடிக்கம்பைப் பார்த்துப் பயந்துகொண்டு வெளியே ஓடி வந்தது கழுதை.